தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊழியரை தாக்கிய முதியவர்: போலீஸ் விளக்கம்

ஊழியரை தாக்கிய முதியவர்: போலீஸ் விளக்கம்

ஊழியரை தாக்கிய முதியவர்: போலீஸ் விளக்கம்


ADDED : பிப் 05, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: ரேஷன் கடை விற்பனையாளரை தாக்கிய சம்பவம் குறித்து, காலைக்கதிர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஈரோடு மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

கவுந்தப்பாடி அருகே செட்டிபாளையம், ரேஷன் கடை விற்ப-னையாளரான, கலையரசி, கடந்த, 2ம் தேதி, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கியபோது, அதே தெருவை சேர்ந்த, லட்சு-மணன் என்ற முதியவர் தாக்கியதாக, நேற்று நமது நாளிதழில் செய்து செய்தி வெளியானது. அது தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் வெளியிட்ட அறிக்கை:கலையரசி கொடுத்த புகாரின்படி, மனுவை பதிவு செய்து, விசாரணை செய்ததில், லட்சுமணன் என்பவருக்கு, 86 வயதாகிறது. வயது முதிர்வால், 15 ஆண்டுகளாக மனநிலை பாதித்து, அவரது மகன் உதயக்குமார் பாதுகாப்பில் இருக்கிறார். முதியவரால் தாக்கப்பட்ட கலையரசிக்கு, காயம் ஏதும் ஏற்பட-வில்லை என விசாரணையில் தெரியவருகிறது. இதுசம்பந்தமாக லட்சுமணன் மகன் உதயக்குமார் மன்னிப்பு கேட்டதால், கலைய-ரசி மேல்நடவடிக்கை வேண்டாம் என எழுதி கொடுத்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us