ADDED : மே 29, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
கோபி, கோபி அருகே வேலுமணி நகரை சேர்ந்தவர் ராஜன், 77; டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் நேற்று மதியம், 1:30 மணிக்கு சத்தி சாலையில் சென்றார். கோபியை சேர்ந்த கோகுல், 30, ஓட்டி வந்த ராயல் என்பீல்டு புல்லட், ராஜன் மொபெட் மீது மோதியது.
இதில் காயமடைந்த ராஜனை, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரியவந்தது. ராஜனின் மகன் ஜெயகரன் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
