ADDED : செப் 17, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சிவகிரி
தாண்டாம்பாளையத்தில் இருந்து, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வரை செல்லும் 26-ஏ
என்ற அரசு டவுன் பஸ், நேற்று முன்தினம் இரவு ஈரோடு காளைமாட்டு சிலை
ரவுண்டானாவில் திரும்பியது. அப்போது அங்கு, 65 வயது மதிக்கத்தக்க
அடையாளம் தெரியாத குடிபோதை நபர், பஸ்சின் முன்புற பகுதியில்
விழுந்தார். இதில் முன்புற சக்கரம் தொடை பகுதி, விலா எலும்பில் ஏறி
இறங்கியது. இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்கு
ஆபத்தான நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து
செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து
விட்டதாக தெரிவித்தனர். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
