தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதையில் மயங்கி விழுந்த முதியவர் பலி

போதையில் மயங்கி விழுந்த முதியவர் பலி

போதையில் மயங்கி விழுந்த முதியவர் பலி


ADDED : செப் 11, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 73. இவர் ஈரோட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

இதனால் முனியப்பன் வீட்டிற்கு வராமல், ஈரோட்டிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் முனியப்பன், சித்தோட்டில் சாலையோரம் மயங்கி விழுந்து கிடந்தார். அப்பகுதியினர் அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரின் மனைவி பாப்பாத்தி, ஈரோடு அரசு மருத்துவமனையில் விசாரித்த போது, சித்தோடு -- ஈரோடு சாலையில், சித்தோடு சர்க்கரை குடோனில் மது போதையில், முனியப்பன் மயங்கி கிடந்த தாகவும், அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சை சேர்த்ததும் தெரியவந்தது. பின்னர் டாக்டர்கள் பரிசோதித்த போது, அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us