ADDED : நவ 24, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு-தொட்டிபாளையம் இடையே ரயில் பாதையை நேற்று முன்தினம் காலை, கவனக்குறைவாக கடக்க முயன்ற, 70 வயது முதியவர் ரயில் மோதி பலியானார்.
பலியானவர் வெள்ளை கலர் சட்டை, மஞ்சள் கலர் வேட்டி அணிந்திருந்தார். நடு மார்பில் கருப்பு மச்சம், இடது தோள் பட்டைக்கு கீழ் காயத்தழும்பு காணப்பட்டது. பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. தகவல் தெரிந்தால், 0424-2255177, 94981-01965, 99420-43888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

