ADDED : ஏப் 27, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே வனத்தில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை, யானை மிதித்து கொன்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் எண்ணமங்கலத்தை அடுத்த விராலிக்காட்டூரைச் சேர்ந்தவர் அங்கப்பன், 79; கூலி தொழிலாளி.
அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், 60; இருவரும் கோவிலுார் வனப்பகுதியில் சீலக்கரடு என்ற இடத்தில், விறகு சேகரிக்க நேற்று காலை 8:30 மணிக்கு சென்றனர்.
வனப்பகுதி துவங்கும் இடத்தில், புதர் மறைவில் நின்றிருந்த ஆண் யானை, இருவரையும் துரத்தியது. ஓட முடியாமல் திணறிய அங்கப்பனை, யானை துாக்கி வீசி மார்பில் மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பர்கூர் போலீசார் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

