நாய் வந்ததால் விபத்து மரத்தில் ஆட்டோ மோதி முதியவர் பலி
நாய் வந்ததால் விபத்து மரத்தில் ஆட்டோ மோதி முதியவர் பலி
ADDED : செப் 24, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே தெருநாய் குறுக்கே வந்ததால், புளியமரத்தில் சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில், முதியவர் பலியானார்.
கோபி
அருகே வாணிப்புத்துாரை சேர்ந்தவர் முகமது சித்திக், 35, டிரைவர்; இவர்
டாடா ஏஸ் சரக்கு ஆட்டோவை, கோபி அருகே பள்ளிபாளையம் என்ற இடத்தில்
நேற்று மாலை, 5:00 மணிக்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது
சாலையின் குறுக்கே தெரு நாய் வந்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை
இழந்து, இடதுபுறம் இருந்த புளியமரத்தில் சரக்கு ஆட்டோ மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த இருவரில், மேட்டூர் அருகே கொளத்துாரை
சேர்ந்த குல்பிர், 68, என்பவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே
பலியானார். அதேபோல் பெயர் தெரியாத மற்றொருவர், கோபி அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
