ADDED : நவ 05, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், : திண்டுக்கல் மாவட்டம், சோமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி பாக்கியம், 64. இவர், கடந்த, 2ல் கரூர்-மதுரை சாலை, வெள்ளியணை அருகே, காக்காவாடி பிரிவு பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கோவா மாநிலம், பாண்டே பகுதியை சேர்ந்த பியூஸ் வினோத் பட்டேல், 37, என்பவர் ஓட்டிச்சென்ற, 'இன்னோவா' கார், பாக்கியம் மீது மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, பாக்கியத்தின் மகன் ஜோதிபாபு அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

