தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தேர்தல் ஆலோசனை கூட்டம்

தேர்தல் ஆலோசனை கூட்டம்

தேர்தல் ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 23, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 02:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில், தேர்தல் செலவினம் மற்றும் கண்காணிப்பு தொடர்பான வழிமுறை குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. சட்டசபை தொகுதி செலவின பார்வை-யாளர் கணேஷ் சந்திர யாதவ் தலைமை வகித்தார். தேர்தல் பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் செலவு என கணக்கு குழுவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்-டது. பி.டி.ஓ., அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு உட்-பட்ட ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு, காங்கேயத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். பயிற்சி முகாமை தேர்தல் பொது மேற்பார்வையாளர் சுதாவர்மா ஆய்வு செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், வாக்குசாவடி அலுவ-லர்கள்

பங்கேற்றனர்.

* தாராபுரம் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்-களுக்கு, தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லுா-ரியில், நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். தாசில்தார் ராமலிங்கம் உள்பட, 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

பார்வையாளர் ஆய்வு

தாராபுரம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட குள்ளாய்பாளையத்தில், 111 மற்றும் 112வது வாக்குச்சாவடிகளில், தேர்தல் பொது பார்-வையாளர் சுதா வர்மா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us