ADDED : மார் 28, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்; பர்கூர் மலையில் சாலை அமைக்காததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து மக்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
அந்தியூரை அடுத்த தாமரைக்கரையிலிருந்து பர்கூர் செல்லும் வழியில் சுண்டப்பூர் பழங்குடி-யின மலை கிராமம் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சுண்டப்பூ-ருக்கு செல்ல, 4 கி.மீ., துாரம் சாலை இல்லை. போக்குவரத்து வசதியும் இல்லை. பல ஆண்டாக கோரிக்கை விடுத்தும் பலனில்லாத நிலையில், சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக, சுண்டப்-பூரில் நேற்று பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இங்கு அமைக்கப்படும் ஓட்டுச்சாவடியில், 195 ஆண்கள், 189 பெண்கள் என, 384 வாக்காளர்கள் உள்ளனர்.
