ADDED : ஏப் 19, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கொடுமுடியை அடுத்த ஆவுடையார் பாறை ஊராட்சிக்கு உட்பட்ட நாகமநாயக்கன் பாளையம் காலனி, முருகன் நகர் காலனி, வெங்கமேடு செல்வ நகர் காலனி பகுதிகளில், 245 வாக்காளர் உள்ளனர். இப்பகுதியினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக, பிளக்ஸ் பேனரும் வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
முருகன் நகரில் பொது கழிப்பிட வசதி இல்லை. நாகமநாயக்கன் பாளையம் காலனி உலர் களம் இருந்த இடத்தில் சமுதாய கூடம் கட்டி தர கோரிக்கை வைத்தோம். ஆனால் சிலர் ஜாதி ஆதிக்கத்தால் தடுத்து வருகின்றனர். அரசு பொது இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம் உள்ளது. இதை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு செய்கிறோம். இவ்வாறு கூறினர்.
