/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிப்.,5ல் 2,678 போலீசாருக்கு தேர்தல் பணி
/
பிப்.,5ல் 2,678 போலீசாருக்கு தேர்தல் பணி
ADDED : பிப் 03, 2025 07:24 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 2,678 போலீசாருக்கு ஓட்டுப்பதிவு தினத்தன்று பணி வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 5ல் நடக்கிறது. 237 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஓட்டுபதிவு தினத்தன்று, 1,678 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர துணை ராணுவத்தினர், 300 பேர், பட்டாலியன் போலீசார், 450 பேர், ஆயுதப்படை போலீசார், 250 பேர் என மொத்தம், 2,678 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இது தவிர அதி விரைவு படையினர் எஸ்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஏ.டி.எஸ்.பி.கள், 10 டி.எஸ்.பிகள், 30 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதிவிரைவு படை வீரர்கள் குழுவில் இடம் பெற்று இருப்பர். தேர்தல் ஓட்டுப்பதிவன்று ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் இக்குழுவினர் எதிர்கொள்ள திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தபால் ஓட்டு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதியில், ஏற்கனவே 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் ஓட்டு குறித்து இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை. போலீசார் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், 75 போலீசார் வசிக்கின்றனர். இவர்கள் தபால் ஓட்டு போடுவது குறித்து தகவல் இல்லை. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்படி இந்த, 75 பேருக்கும் பிப். 5 அதாவது ஓட்டுப்பதிவு தினத்தன்று தேர்தல் தொடர்பான பணி (ஓட்டு சாவடி பாதுகாப்பு உள்ளிட்ட பணி) ஏதும் வழங்கவில்லை. அவர்கள் பிற ரெகுலர் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே இந்த 75 பேரும் வழக்கம் போல் ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டு போடலாமா என்பது குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. இவ்வாறு போலீசார் கூறினர்.

