sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் செலவின ஆலோசனை கூட்டம்

/

தேர்தல் செலவின ஆலோசனை கூட்டம்

தேர்தல் செலவின ஆலோசனை கூட்டம்

தேர்தல் செலவின ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 04, 2026 09:08 AM

Google News

ADDED : மார் 04, 2026 09:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட சட்டசபை தேர்தலில், 8 தொகுதியிலும் தேர்தல் செலவினங்களை நிர்ணயிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது. தேர்தலின் போது வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களுக்கான விலை பட்டியல் தயாரிக்க வேண்டும்.

கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலின் போது செலவினங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அத்துடன் தேர்தல் ஆணையமும் உத்தேச விலைப்பட்டியலை வழங்கி உள்ளது.

இவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆய்வு செய்து, ஒவ்வொரு பொருட்கள், உணவு, கார் உள்ளிட்ட வாகன வாடகை, மின் விளக்கு உட்பட பிரசாரத்துக்கான பொருட்கள், தேர்தல் பணிமனை அலுவலக வாடகை, மைக்செட் உட்பட அனைத்து செலவுகளுக்கான தொகையை நிர்ணயித்து ஆலோசனை வழங்கலாம்.

அவற்றை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் நிர்ணயித்து வெளியிடலாம் என அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us