தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மின் பொறியாளர், அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் துவக்கம்

மின் பொறியாளர், அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் துவக்கம்

மின் பொறியாளர், அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் துவக்கம்


ADDED : மார் 14, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் மற்றும் அலுவலர் சங்கம் சார்பில், ஈரோடு, ஈ.வி.என்.சாலையில் உள்ள மின்வாரிய மேற்-பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை காத்தி-ருப்பு போராட்டத்தை துவக்கினர். மின்வாரிய பொறியாளர், அலு-வலர் உள்ளிட்ட அனைவருக்கும், நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். கடந்த, 12 ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அனைவருக்கும் ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகை வழங்கப்பட்டது.

தற்போது, 13வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில், கிளாஸ் - 1, 2க்கு ஊதிய உயர்வு இல்லை என்றும், பிற பணியாளர்களுக்கு சில சலுகைகள் பறிக்கப்பட்டு ஊதிய உயர்வு திட்ட வரைவில் கூறியுள்ளனர். இதை கண்டித்து மாநில அளவில் காத்திருப்பு போராட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பொறியாளர் சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மண்டல செயலர் சந்திரசேகர், ஜோதிமணி, கவிதா, திருநீலகண்டன், முருகானந்தம் உட்பட பலர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us