/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரியால் விபத்து எலக்ட்ரீசியன் பலி
/
லாரியால் விபத்து எலக்ட்ரீசியன் பலி
ADDED : ஜூலை 13, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகேயுள்ள மலையாத்தாபாளையத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் மோகன்ராஜ், 35; வெள்ளகோவில்-காங்கேயம் ரோட்டில் காடையூரான்வலசு பகுதியில் ஹோண்டா பைக்கில் நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது சாலையேரத்தில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியது.
தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.