/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்வாரிய கேங்மேன் போராட்டம் துவக்கம்
/
மின்வாரிய கேங்மேன் போராட்டம் துவக்கம்
ADDED : அக் 08, 2025 01:15 AM
ஈரோடு, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு, ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர்.
மண்டல செயலர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் மாரப்பன் போராட்டத்தை துவக்கி வைத்தார். கிளை தலைவர் ஜோதிமணி, மாவட்ட துணை தலைவர் ஸ்ரீராம், மாநில துணை தலைவர் ஜான்சன், இளங்கோ உட்பட பலர் பேசினர்.
கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பணி மாற்றம் வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு, 2019 டிச.,1 முதல் வழங்க வேண்டிய, 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மின்னோட்டம் இல்லாத இடங்களில் வேலை செய்வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். சொந்த மாவட்டங்களுக்கு ஊர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.