ADDED : மார் 03, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஈரோடு ஈ.வி.என்.சாலையில் உள்ள, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு நுழை-வாயில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொறியாளர் சங்க அமைப்பு செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். பிரிவு 1, 2 பொறியா-ளர்கள், அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்படுத்தி கடந்த, 2023 முதல் வழங்க வேண்டும். மின்வாரியம் சார்பில் ஊதிய உயர்வு வரைவு அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொழி-லாளர், அலுவலர் என பாரபட்ச அணுகுமுறையை கைவிட வலி-யுறுத்தினர்.
