/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயன் வாய்க்காலில் சாய கழிவுநீர் கலப்பு 44 தொழிற்சாலையின் மின் இணைப்பு 'கட்'
/
காளிங்கராயன் வாய்க்காலில் சாய கழிவுநீர் கலப்பு 44 தொழிற்சாலையின் மின் இணைப்பு 'கட்'
காளிங்கராயன் வாய்க்காலில் சாய கழிவுநீர் கலப்பு 44 தொழிற்சாலையின் மின் இணைப்பு 'கட்'
காளிங்கராயன் வாய்க்காலில் சாய கழிவுநீர் கலப்பு 44 தொழிற்சாலையின் மின் இணைப்பு 'கட்'
ADDED : நவ 01, 2025 01:44 AM

ஈரோடு: பவானி ஆற்றில் நீர் நிறுத்தப்பட்ட பிறகும், காளிங்கராயன் வாய்க்காலில் 200 கனஅடி நீர் பாய்வதால், அதில் தொழிற்சாலை கழிவுநீர் விடப்படுவது அம்பலமாகி உள்ளது.
ஈரோடு மாவட்ட பாசனத்திற்கு பிரதானமானது காளிங்கராயன் வாய்க்கால். பவானி ஆற்றில் இருந்து இந்த கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் இருந்து வாய்க்காலுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையிலும், 200 கனஅடி வரை தண்ணீர் பாய்கிறது. ஆய்வில், இது சாய கழிவுநீர் என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் கந்தசாமி முன்னிலையில் நடந்த விவாதத்தின் போது, காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் பேசியதாவது:
காளிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக மார்ச், 15 முதல், ஜூன், 15 வரை தண்ணீர் நிறுத்தப்படுகிறது.
அந்நேரத்தில் சீரமைப்புடன், ஆக்கிரமிப்பை அகற்றி, டிஜிட்டல் முறையில் சர்வே செய்து, செடி கொடிகளை அகற்ற வேண்டும். தற்போது தண்ணீர் திறப்பு நிறுத்திய போதும், 200 கன அடி சாய, சலவை, தோல் ஆலை கழிவுநீர், ஈரோடு மாநகராட்சி கழிவு நீர் கலந்து விவசாயத்தை வீணாக்குகிறது.
இவ்வாறு பேசினார்.
இதற்கு பதிலளித்த மாவட்ட சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் ராஜ்குமார், ''எட்டு மாதங்களில் கழிவு நீர் வெளியேற்றம், பிற நடவடிக்கைக்காக, 3 தோல் ஆலை, 7 சாய ஆலை, 13 சலவை ஆலை உட்பட, 44 ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, 39.47 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட் டுள்ளது.
' 'காளிங்கராயனில் செல்லும் தண்ணீர் அவ்வப்போது சேகரிக்கப்பட்டு, பெருந்துறையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதித்து, சாயக்கழிவு கலப்பு பற்றி ஆய்வு செய்கிறோம், '' என்றார்.

