ADDED : ஜூலை 20, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, மின் பொறியாளர் அமைப்பு சார்பில், ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரசாணை எண்-100ன்படி நடந்த முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மின்வாரிய பணியாளர்களின் நலன் கருதி, அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தமாக மாற்றி அமைக்க வேண்டும். ஊதியக்குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் வகையில் ஓய்வூதிய சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., துணை தலைவர் பெரியசாமி, நிர்வாகிகள் ஸ்ரீதேவி, விஸ்வநாதன், குப்புசாமி, சண்முகம் உட்பட பலர் பேசினர்.