ADDED : செப் 20, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம்
ஈரோடு, செப். 20-
ஸ்ரீபெரும்புதுாரில் செயல்படும் சாம்சங் நிறுவனம், நிறுவன தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேர உரிமைகளை வழங்க மறுக்கிறது. தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, 10 நாட்களாக அந்நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் பெரியசாமி, செயலாளர் ஸ்ரீதேவி, மண்டல செயலாளர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.