/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் வேலியால் விபரீதம் யானை பலி; விவசாயி கைது
/
மின் வேலியால் விபரீதம் யானை பலி; விவசாயி கைது
ADDED : பிப் 18, 2025 07:26 AM

அந்தியூர் : ஈரோடு மாவட்டம், அத்தாணி, காக்காச்சிகுட்டையை சேர்ந்தவர் சின்னச்சாமி, 80; பொன்னாச்சி அம்மன் கோவில் வனப்பகுதியை ஒட்டி வசிக்கிறார். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அப்பகுதியில் யானைகள் புகுந்து, பயிர்களை மூன்று மாதமாக சேதப்படுத்தி வந்தன.
சின்னச்சாமி தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், கரும்பை சுவைக்க, வழக்கம்போல் நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்த, 15 வயது ஆண் யானை, கம்பி வேலியை தும்பிக்கையால் பிடித்து இழுத்தபோது, மின்சாரம் பாய்ந்து பலியானது.
வனத்துறையினர் நேற்று காலை, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தியதற்காக, அவரது விவசாய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது; சின்னச்சாமி கைது செய்யப்பட்டார். மின் இணைப்பு துண்டிப்புக்கு சக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.