/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தி புலிகள் காப்பகத்தில் யானை கணக்கெடுப்பு தொடக்கம்
/
சத்தி புலிகள் காப்பகத்தில் யானை கணக்கெடுப்பு தொடக்கம்
சத்தி புலிகள் காப்பகத்தில் யானை கணக்கெடுப்பு தொடக்கம்
சத்தி புலிகள் காப்பகத்தில் யானை கணக்கெடுப்பு தொடக்கம்
ADDED : மே 24, 2024 06:43 AM
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகங்களில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.
தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநில வனப்பகுதிகளில் நடப்பாண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு, மூன்று விதமாக மூன்று நாட்கள் நடக்கிறது. இதன்படி சத்தி புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தி, ஆசனுார், தாளவாடி, தலமலை, ஜீரகள்ளி, பவானிசாகர், விளாமுண்டி, கடம்பூர், டி.என்.பாளையம், கேர்மாளம் என, 10 வனச்சரகங்களில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று யானையை நேரடியாக பார்த்து அதன் பாலினம் மற்றும் பெரியது, சிறியது என வகைப்படுத்தி கணக்கெடுப்பு செய்தனர். இரண்டாம் நாள் நேர்கோட்டு பாதை, மூன்றாம் நாள் நீர் நிலைகளுக்கு வரும் யானைகள் என இன்றும், நாளையும் கணக்கெடுப்பு தொடர்கிறது. இதில் வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் என, 372 பேர் ஈடுபடுகின்றனர். * டி.என்.பாளையம் வனச்சரக பகுதியில் வனச்சரக அலுவலர் மாரியப்பன், வனவர் பழனிச்சாமி, வனக்காப்பாளர் யுவராணி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.* அந்தியூர் வனப்பகுதியில் அந்தியூர் ரேஞ்சர் முருகேசன் தலைமையில், 45 பீட்களாக பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
-நிருபர் குழு-