ADDED : ஆக 10, 2026 05:43 AM

அந்தியூர்,:அந்தியூர்
அருகே வட்டக்காட்டில், வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களில், சமீபமாக
யானைகள் புகுந்து பயிர் சேதம் செய்வது அதிகரித்துள்ளது.
வட்டக்காடு
மொழுக்கன்தோட்டத்தை சேர்ந்த பாக்கியம் என்பவரின் கரும்பு
தோட்டத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் புகுந்த ஒரு யானை, கால்
ஏக்கர் பரப்பிலான கரும்பை சேதப்படுத்தியது. அதே பகுதியில்
அல்லிமுத்துவின் வாழை தோட்டத்தில், 20க்கும் மேற்பட்ட வாழை மரங்களை
முறித்து சேதப்படுத்தியது.
அப்பகுதி விவசாயிகளின் படி சென்ற
வனத்துறையினர், டிரோன் உதவியால் யானையை கண்டறிந்து விரட்டும் பணியை
தொடங்கினர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப்பின், பட்டாசு,
தீப்பந்தம் காட்டி யானையை காட்டுக்குள் விரட்டினர்.
வனத்துக்குள்
செல்லும் வழியில் கிழங்குகுழி அருகில் பழைய லைன் மாரியம்மன்
வனப்பகுதியை ஒட்டிய குமார் மற்றும் மாரக்குட்டி ஆகியோருக்கு
சொந்தமான நெற்பயிரை மிதித்து நாசமாக்கியது.
