ADDED : ஜூலை 06, 2026 04:13 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:ஆசனுார் அருகே, பஸ் ஸ்டாப்பில் புகுந்த ஒற்றை யானையால், பொதுமக்கள் -அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சத்தியமங்கலம்
புலிகள் காப்பகத்திற்குட்பட்ட, வனச்சரக பகுதியில் ஏராளமான
விலங்குகள் உள்ளன. இந்நிலையில், ஆசனுார் அருகே நேற்று முன்தினம் இரவு
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, அங்குள்ள பஸ் ஸ்டாப்
பகுதியில் புகுந்தது. இதை பார்த்த பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த காட்சிகள், அந்த பகுதியில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில்
பதிவானது. தற்போது, சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.
