/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த யானை
/
லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த யானை
ADDED : செப் 06, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் :தாளவாடி மலை கிராமங்களில் அறுவடை செய்யப்படும் கரும்புகளை, லாரிகளில் ஏற்றி சத்தி தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம். ஆசனூர் அருகே அரேபாளையம் பிரிவு அருகில் கரும்பு லாரிகள் சத்தியமங்கலம் நோக்கி நேற்று மாலை வந்தன.
அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, ஒரு லாரியை சுற்றி வளைத்து நின்றது. லாரி மீது போட்டிருந்த தார்ப்பாயை தும்பிக்கையால் உருவி எறிந்து விட்டு கரும்புகளை எடுத்து ருசித்தது. இதனால் லாரியை தொடர்ந்து வந்த பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன.