ADDED : ஆக 27, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக.  டி.என்.பாளையத்தை அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை அருகே டேம்தோட்டம் பகுதி  விவசாயிகள், தங்கள் பட்டா நிலத்தில்  வாழை, மரவள்ளி கிழங்கு  உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு குண்டேரிபள்ளம் வனப்பகுதியில் இருந்து வந்த ஐந்து யானைகள், டேம்தோட்டம் பகுதியில் பிரபு, நாகராஜ் ஆகியோருக்கு சொந்தமான வாழை,  மரவள்ளி பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.விவசாயிகள் உதவியுடன் வனத்துறையினர் அரைமணி  நேரம் போராடி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

