/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தக்காளி, வாழைகளை சேதம் செய்த யானைகள்
/
தக்காளி, வாழைகளை சேதம் செய்த யானைகள்
ADDED : மார் 03, 2024 01:57 AM
சத்தியமங்கலம்:தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள் தக்காளி, வாழைகளை சேதப்படுத்தின.தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மெட்டல்வாடி பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள் விவசாயி பங்காரு தோட்டத்தில் புகுந்து தக்காளி, வாழை மரங்களை சேதம் செய்தது. விவசாயிகள் உதவியுடன் யானைகளை விரட்டினர். மூன்று மணி நேர போராட்டத்திக்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. யானைகளால் அரை ஏக்கர் தக்காளி, 200 வாழை மரங்கள் சேதமானது. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

