ADDED : அக் 10, 2024 01:45 AM
அ நிறம் | அளவு
இமானுவேல் சேகரன்
100வது பிறந்த நாள் விழா
ஈரோடு, அக். 10-
சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனின், 100வது பிறந்தநாள் விழா நேற்று அரசு விழாவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு ப.செ. பூங்கா சந்திப்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், இமானுவேல் சேகரன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இமானுவேல் சேகரன் பிறந்தநாளை, அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் மயில் துரையன், மாவட்ட பொருளாளர் ராமு, தொழிற்சங்க செயலாளர் குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி காஞ்சனா, செயலாளர் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
