சென்னிமலை: மேற்கு வங்க மாநிலம், பதும்பூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரம்ஜான், 18. இவர், ஈங்கூரில் தங்கியிருந்து சாமிநாதன் என்பவர் கட்டி வரும் கட்டடத்தில், டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். கடந்த, 20ம் தேதி முகமத் ரம்ஜானும், இவரது நண்பர் ஜன் அலம் என்பவரும் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, கிரானைட் பாலிஷ் போடும் மிஷின் முகமத் ரம்ஜானின் கால் தொடை மீது விழுந்துள்ளது. இதில் காயம-டைந்த முகமது ரம்ஜான், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்ற பிறகு, சில நாட்கள் கழித்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்-கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். உரிய பாதுகாப்பு இல்லாமல், வேலை-யாட்களை வேலை செய்ய வைத்ததாக இன்ஜி-னியர் விக்னேஷ் மீது, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

