நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.
மத்திய அரசு இலாக்காக்களை மூடக்கூடாது. அணுசக்தி துறையை தனியார் மயமாக்கும் 'சாந்தி' திட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின், 8 வது ஊதியக்குழுவின் விதிமுறைகளை மாற்ற வேண்டும். ஓய்வூதியர்களையும் ஊதியக்குழு விதிமுறைகளுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில், வருமான வரி ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழு, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. தபால் ஊழியர் சங்க தலைவர் சுரேஷ் தலைமையில், நிர்வாகிகள் பிரித்திவிராஜ், மேபிள் குயினி, ராமசாமி, சக்திவேல், என்.ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

