/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு 24ல் வேலை வாய்ப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு 24ல் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 21, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், மாவட்ட திறன் பயிற்சி மையம் இணைந்து, வரும், 24ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் முகாமில், 8 முதல் பிளஸ் 2 வரை படித்தோர், தொழில் கல்வி, இளங்கலை, முதுகலை படித்தோர் சான்றுகளுடன் பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 94999 33475 என்ற எண்ணில் தொடர்பு கொள்-ளலாம்.