/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூடுதுறை பகுதியில் காலி தண்ணீர் தொட்டி
/
கூடுதுறை பகுதியில் காலி தண்ணீர் தொட்டி
ADDED : மே 05, 2025 02:25 AM
பவானி: பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்திரு-விழா தற்போது நடந்து வருகிறது.
அதேசமயம் பள்ளி, கல்லுாரி விடுமுறையால் வெளிமாவட்ட பக்-தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். கூடுதுறை பகு-தியில் ஆற்றில் போதிய தண்ணீர் செல்லாமல், காவிரி ஆறு பாறைகளாக காட்சியளிக்கிறது. முழங்கால் அளவு தண்ணீரில் பக்-தர்கள்
குளிப்பதை தவிர்க்க, கோவில் நிர்வாகம் சார்பில், பரிகார மண்-டபம் அருகே தண்ணீர் தொட்டி கட்டியுள்ளனர். அதில் தண்-ணீரை நிரப்பி வந்தனர். கடந்த சில நாட்களாக தொட்டியில் தண்ணீர் நிரப்புவதில்லை. இதனால் ஆற்றிலும் தண்ணீர் இல்-லாமல், தொட்டியிலும் தண்ணீரில்லாமல், பக்தர்கள் தவிக்கின்-றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் வரை, தண்ணீர் தொட்-டியை அவ்வப்போது நிரப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.