ADDED : மே 15, 2025 01:34 AM
அ நிறம் | அளவு
கோபி ;கோபி வாய்க்கால் ரோடு பகுதி
யில், நகராட்சி சார்பில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கோபி வாய்க்கால் ரோடு பகுதியில் உள்ள கடை மற்றும் குடியிருப்புகளில், கட்டடதாரர்கள் சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக, கோபி நகராட்சிக்கு புகார் சென்றது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர், வாய்க்கால் ரோடு பகுதியில் நேற்று மதியம் 2:00 மணிக்கு முகாமிட்டனர். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
