தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு ஆய்வு

நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு ஆய்வு

நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு ஆய்வு


ADDED : நவ 24, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீர்வழிப்பாதையில்

ஆக்கிரமிப்பு ஆய்வு

ஈரோடு, நவ. 24-

ஈரோடு, கருவில்பாறைவலசு குளத்தில் இருந்து உபரி நீர், கனிராவுத்தர் குளம் வழியாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் கலந்து வந்தது. கனி ராவுத்தர் குளத்துக்கு வரும் முன், பல இடங்களில் சாய, சலவை கழிவு நீர் கலப்பதால், கனி ராவுத்தர் குளத்தில் மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் சாய ஆலையை சேர்ந்த பலரும் சேர்ந்து, பெரியவலசு பகுதியில் உடைப்பு ஏற்படுத்தி, கனி ராவுத்தர் குளத்துக்கு உபரி நீர் வராமல், பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் கலப்பது போல் மாற்றிவிட்டனர்.

தவிர பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து, நீர் வழிப்பாதையை அடைத்து வருகின்றனர். இதுபற்றிய புகாரின் பேரில், தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று ஆய்வு செய்து, கருவிகள் உதவியுடன் அளவீடு செய்யும் பணிகளை துவக்கினர். அளவீட்டுக்கு பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், பெரியவலசு பகுதி உடைப்பு சரி செய்து, மீண்டும் கனி ராவுத்தர் குளத்துக்கே தண்ணீர் வரும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us