/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பவானி ஒழுங்கு முறை விற்பனைக்கூட விவரம்
/
ஈரோடு பவானி ஒழுங்கு முறை விற்பனைக்கூட விவரம்
ADDED : அக் 24, 2025 01:03 AM
* ஈரோடு மாவட்டம் பவானி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 514 காய் வரத்தாகி ஒரு காய், 25.05 ரூபாய் முதல் 35.40 ரூபாய் வரை விலை போனது.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மூன்று மூட்டை வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 214.29 ரூபாய், குறைந்தபட்சம், 110.19 ரூபாய்க்கு விலை போனது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில் கதளி ஒரு கிலோ, 37 ரூபாய், நேந்திரன், 26 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 680 ரூபாய், தேன்வாழை, 510, பூவன், 430, ரஸ்த்தாளி, 540, மொந்தன், 190, ரொபஸ்டா, 290, பச்சைநாடான், 520 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு வந்த, 2,450 வாழைத்தார்களும், 5.12 லட்சம் ரூபாய்க்கு
விற்றன.
* மொடக்குறிச்சி உப விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 10,000 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 66.54 - 68.75 ரூபாய், பச்சை தேங்காய், 52.92 - 65.15 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 90.85 ரூபாய் என, 3,060 கிலோ தேங்காய், 1,௯௩ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று மாட்டு சந்தை நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை பெய்வதால், தமிழகம், கேரளா தவிர பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் வரவில்லை.
அதேசமயம் சந்தைக்கு, 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 40 கன்று; 23,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை; 23,000 முதல், 75,000 ரூபாய் மதிப்பில், 200 பசு மாடு, முற்றிலும் கலப்பின மாடுகள் குறைவாக வரத்தானது. இதில், 80 சதவீதம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

