தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்

தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்

தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்


ADDED : ஜன 16, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.14 முதல், 18 வரை, ஐந்து நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்-ளது.

இதனால் ஈரோடு மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நிறு-வனங்களில் பணியாற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் நேற்று முன்-தினம் முதலே சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் மாநகரின் முக்கிய சாலைகளான மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, காந்திஜி ரோடு உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்-சோடி காணப்பட்டது. அதேபோல் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கத்தை விட குறைவான பயணிகளே இருந்தனர்.

கடைவீதி பகுதிகளான மணிக்கூண்டு, ஆர்.கே.வி ரோடு, ஈஸ்-வரன் கோவில் வீதி ஆகிய இடங்களிலும் சொற்ப அளவிலான மக்கள் கூட்டமே இருந்தது. வழக்கமாக எப்போதுமே பரபரப்-பாக இருக்கக்கூடிய கனி மார்க்கெட் வளாகமும் வெறிச்சோடியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us