/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்டப்பணிகள் ஈரோடு கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 17, 2025 01:32 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செயல்படும் ரேஷன் கடையில் பொருள் இருப்பு, விற்பனை விபரம், பயன்பெறும் ரேஷன் கார்டு எண்ணிக்கை போன்றவற்றை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். பதிவேடுகள் பராமரிப்பு, விடுமுறை நாட்கள் விபரத்தை கேட்டறிந்தார்.
பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் விபரம், சேர்க்கை விபரம், ஆசிரியர் - மாணவர்கள் விகிதம் மற்றும் பதிவேட்டை பார்வையிட்டு, கலந்துரையாடினார். 'கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக்
கூடாது. அதை தடை என கருதவும் கூடாது. தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கப்படுகிறது. உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்க, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுகிறது. அவற்றை பெற்று பயன் பெற வேண்டும். பள்ளி வளாகத்தையும், கழிப்பறையை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும்' என, கலெக்டர் கூறினார்.
பின் பல்வேறு வளர்ச்சி பணிகள், பள்ளி வளாகத்தை ஆய்வு செய்தார். பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சன் சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.

