ADDED : ஏப் 10, 2026 03:00 AM
ஈரோடு: ஈரோடு மாநகர காங்., கட்சி மண்டல தலைவரும், 43வது வார்டு கவுன்சிலரின் கணவருமான ஜாபர் சாதிக், கிழக்கு தொகுதி த.வெ.க., வேட்பாளர் பாலாஜி முன்னிலையில் த.வெ.க.,வில் நேற்று இணைந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 38 ஆண்டுகளாக காங்., கட்சியில் பயணித்து வந்தேன்.கூட்டணியில் தொகுதி பங்கீடு நடக்கும் முன்பே, ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில், ஐந்து பேரிடம் கட்சி தலைமை விருப்ப மனு பெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதியை, காங்., கட்சிக்கு ஒதுக்குவதாக தி.மு.க., அறிவித்த பிறகு சென்னை மற்றும் டெல்லி காங்., தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது, எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
இதனால் வேட்பு மனு தாக்கல் செய்தாலாவது பேசுவார்கள் என நினைத்தேன். அதுவும் நடக்காததால், வேட்பு மனுவை வாபஸ் பெற்றாடு, காங்., கட்சியில் இருந்து விலகி விட்டேன். த.வெ.க.,வில் இணைந்து வேட்பாளர் பாலாஜி வெற்றிக்கு களப்பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர் மீது அவதுாறுபோலீசார் வழக்குப்பதிவு
பெருந்துறை: பெருந்துறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம், பணம் கொடுத்தால் அரசு பணி வாங்கி கொடுத்து விடுவார் என்று, வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவியது. இதுகுறித்து பெருந்துறை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
