ADDED : நவ 27, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நாளை (28) மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெறுகிறது என, மேயர் நாகரத்தினம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
நாளை நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு விடுவது, பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுமான பணிகளுக்கான டெண்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான நிலத்தை காவல்துறைக்கு நிலமாற்றம் செய்வது போன்ற பல்வேறு தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக கொண்டு வரப்பட உள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.

