ADDED : ஆக 12, 2026 06:43 AM
ஈரோடு:ஈரோட்டில்,
மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த, அனைத்து துறை
அலுவலர்களுடனான, உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது: கிராமப்புற சாலைகள்
அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதுபற்றி இணைய தளத்தில் பதிவேற்றம்
செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை மூலம் மலை
கிராமங்களுக்கு அமைக்கப்படும் மலை சாலைகளை தரமாக அமைக்க வேண்டும்.
சுகாதாரத்துறையினர்,
பிறப்பு, இறப்பு பதிவில் பெற்றோரின் ஆதார் விபரங்களை மென்பொருளில்
பதிவு செய்து இணைக்க வேண்டும். வீட்டு வசதி வாரியம் சார்பில் பட்டா பெயர்
மாற்றம் செய்ய கோரும் மனுக்களை விரைவாக பரிசீலிக்க வேண்டும்.
மாவட்ட
அளவில் சிறப்பாக, அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு அலுவலருக்கு,
'மாதம் ஒரு மாமனிதர்' என்ற நற்சான்றிதழ் வழங்கப்படும். ஜூன்
மாதத்துக்கான சான்றிதழ், நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர்
உதயகுமார், ஜூலை மாதத்துக்கான சான்று, கோபி நகராட்சி சுகாதார
அலுவலர் ரவிச்சந்திரனுக்கும் வழங்கப்பட்டது. இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார், எஸ்.பி., கிரண் ஸ்ருதி, மாவட்ட வன
அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு, ஆர்.டி.ஓ., முத்துசாமி உட்பட
பலர் பங்கேற்றனர்.
