தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாவட்ட செய்தி துளிகள்

ஈரோடு மாவட்ட செய்தி துளிகள்

ஈரோடு மாவட்ட செய்தி துளிகள்


ADDED : ஜூன் 08, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில், 30 கிலோ எடை கொண்ட நாட்டு சர்க்கரை, 2,600 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 முதல், 1,370 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,300 முதல், 1,370 ரூபாய்; அச்சு வெல்லம், 350 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 முதல், 1,440 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தைவிட நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம், 60 ரூபாய் விலை சரிந்தது. உருண்டை வெல்லம், 30 ரூபாய் விலை குறைந்தது.

* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 25,124 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ தேங்காய், 49 ரூபாய் முதல் 6௮ ரூபாய் வரை, 9,729 கிலோ தேங்காய், 5.78 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பாக்கு ஏலம் நடந்தது. மொத்தம், 661 கிலோ வரத்தானது. காய்ந்த பாக்கு கிலோ, 181 ரூபாய், பாக்கு பழம், 67 ரூபாய், சாலி பாக்கு, 345 - 372 ரூபாய் வரை விலை போனது.

* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு. 705 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 90.09 முதல், 136.60 ரூபாய்; சிவப்பு ரகம், 82.40 முதல், 126.42 ரூபாய்; வெள்ளை ரகம், 98.42 முதல், 11௧ ரூபாய் வரை, 52,657 கிலோ எள், 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 2,556 மூட்டைகளில், ௧.௨௧ லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 207.89 ரூபாய் முதல் 221.35 ரூபாய்; இரண்டாம் தரம், 37.89 ரூபாய் முதல் 217.47 ரூபாய் வரை, ௨.௪௭ கோடி ரூபாய்க்கு விற்றது.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி கிலோ, 50 ரூபாய், நேந்திரன், 40 ரூபாய்க்கும் விற்றது. செவ்வாழை தார், 950, தேன்வாழை, 710, பூவன், 700, ரஸ்த்தாளி, 660, மொந்தன், 410, ரொபஸ்டா, 480, பச்சைநாடான், 430 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,460 வாழைத்தார்களும், 7.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 16 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்றது.

*சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 840 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை-400, காக்கடா-350, செண்டுமல்லி-60, கோழிகொண்டை-100, ஜாதிமுல்லை-600, கனகாம்பரம்-800, சம்பங்கி-40, அரளி-160, துளசி-60, செவ்வந்தி-220 ரூபாய்க்கும் விற்பனையானது.

* திருப்பூர் மாவட்டம் முத்துார் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் நேற்று எள் ஏலம் நடந்தது. 41 மூட்டைகளில், 3,062 கிலோ வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 125.05 ரூபாய்; குறைந்தபட்சம், ௧00 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 807 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 215.35 ரூபாய், குறைந்தபட்சம், 110.20 ரூபாய்க்கும் ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us