ADDED : ஆக 31, 2011 01:02 AM
கோபிசெட்டிபாளையம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோபி பஸ் ஸ்டாண்டில் 11 அடி உயர சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், கடத்தூர், கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. கோபி பஸ் ஸ்டாண்டில் 11 அடி உயர மிக பிரம்மாண்ட சிலையும், கூகலூர், நஞ்சகவுண்டன்பாளையத்தில் ஏழு அடி உயர சிலை என, கோபி சுற்று வட்டாரத்தில் 32 இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மொடச்சூரில் பொது மக்கள் சார்பில் 10 இடங்களிலும், வாணிப்புத்தூர், பங்களாபுதூர் ஆகிய இடங்களில் இந்து முன்னணி சார்பில் 10 சிலை, பொது மக்கள சார்பில் ஐந்து சிலை, கவுந்தப்பாடி பகுதியில் இந்து முன்னணி சார்பில் 20 சிலை, பொது மக்கள் சார்பில் 15 சிலைகள், கடத்தூர் பகுதியில் 15 சிலைகள் வைக்கப்பட்டு, பூஜை நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி தினமான நாளை கோபி பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சந்தியா வந்தனத்துறை வாய்க்காலிலும், டி.என்.பாளையம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றிலும், நம்பியூர், கடத்தூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கொடிவேரி அணையிலும், கவுந்தப்பாடியில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பெருந்தலையூர் பவானி ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

