sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தியில் ஒரே நேரத்தில் 1,000 மரம் நடும் விழா

/

சத்தியில் ஒரே நேரத்தில் 1,000 மரம் நடும் விழா

சத்தியில் ஒரே நேரத்தில் 1,000 மரம் நடும் விழா

சத்தியில் ஒரே நேரத்தில் 1,000 மரம் நடும் விழா


ADDED : செப் 15, 2011 02:25 AM

Google News

ADDED : செப் 15, 2011 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தி, புதுவடவள்ளியில், 17ம் தேதி காலை 8.30 மணிக்கு, ஒரே நேரத்தில் 1,000 மரக்கன்று நடும் விழா நடக்கிறது.

சத்தியமங்கலம் பண்ணாரி ரூரல் ஃபவுண்டேஷன், கோவை சிறுதுளி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடக்கிறது. கலெக்டர் காமராஜ் தலைமை வகிக்கிறார். 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் முன்னிலை வகிக்கிறார். பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் வரவேற்கிறார். பண்ணாரி ரூரல் ஃபவுன்டேஷன் செயல்தலைவர் சின்ராஜ் நன்றி கூறுகிறார். சத்தி, கொங்குநகர், ராஜிவ் நகர், பாரதிநகர், நேருநகர், ஆசிரியர் காலனி, இந்திரா நகர், மல்லிகை நகர் உள்ளிட்ட 11 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. புதுவடவள்ளியில் விழா துவங்கும் அதே நேரத்தில், மற்ற இடங்களிலும், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அதிகாரிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளி, ஸ்ரீராகவேந்திரா மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.டி., யுனிவர்சல் பள்ளி, எஸ்.ஆர்.என்., மெட்ரிக் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நகராட்சி மற்றும் யூனியன் பள்ளி மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நடுகின்றனர். ஏற்பாடுகளை பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை துணை தலைவர் மணிவேல், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளி மக்கள் தொடர்பு அதிகாரி குழந்தைவேல் ஆகியோர் செய்கின்றனர்.








      Dinamalar
      Follow us