/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காந்தி ஜெயந்தி விழா கதர் தள்ளுபடி விற்பனை துவக்கம்
/
காந்தி ஜெயந்தி விழா கதர் தள்ளுபடி விற்பனை துவக்கம்
காந்தி ஜெயந்தி விழா கதர் தள்ளுபடி விற்பனை துவக்கம்
காந்தி ஜெயந்தி விழா கதர் தள்ளுபடி விற்பனை துவக்கம்
ADDED : அக் 03, 2011 03:15 AM
ஈரோடு: ஈரோட்டில் கதர் கிராமத் தொழில்கள் வாரியம், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது.
ஈரோடு யூனியன் வளாகத்தில், கலெக்டர் சண்முகம், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
கச்சேரி காதிகிராஃப்ட் அங்காடியில், காந்தியடிகள் படத்துக்கு அஞ்சலி செலுத்தி, ஈரோடு பிரியா என்பவருக்கு முதல் தள்ளுபடி கதர் விற்பனையை கலெக்டர் துவக்கி வைத்து பேசியதாவது: நாம் அனைவரும் காந்தியடிகளின் கொள்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வுலகில் போற்றுதலுக்குரிய மனிதர்களில் முதன்மையானவர் காந்தியடிகள்.
இரண்டாவதாக நான் நேசிப்பது, வாசிப்பது எனதருமை தமிழ். மூன்றாவதாக நான் நேசிப்பது எளிமையிலும் இந்நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட காந்தியடிகள். அவரது அஹம்சை கருத்துக்களை ஒரு சிலவற்றையாவது அனைவரும் பின்பற்ற வேண்டும். அவர் கருத்துக்களை முழுமையாக நிறைவேற்ற பல நூற்றாண்டுகள் ஆகிவிடும். அவர் பிறந்த இம்மண்ணில் நாம் பிறந்ததை பெருமையாக கருத வேண்டும்.
காந்தியடிகள் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் கதர்கிராமத் தொழில்கள். நாம் வாங்கும் ஒவ்வொரு ரூபாய் கதர் மற்றும் கிராமப்பொருட்களின் மூலம் கிராமங்களில் வாழும் லட்சக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்களில் வறுமையைப் போக்கி மறுமலர்ச்சி ஏற்படுத்திடும்.
ஈரோடு மாவட்டத்தில் 4 காதிகிராஃப்ட்கள் செயல்படுகின்றன. இம்மாவட்டத்தில் கடந்தாண்டு கதர், உல்லன், பட்டு, பாலிஸ்டர் ரகங்கள் விற்பனை செய்ய 92 லட்சம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 93.18 லட்சம் ரூபாய் விற்பனையானது. விற்பனையை அதிகரிக்க அனைத்து ரகங்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தாண்டு ஈரோடு மாவட்டத்துக்கு தீபாவளி சிறப்பு கதர் விற்பனை இலக்கு 93 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குனர் சுரேஷ் வரவேற்றார். தாசில்தார் அருணாச்சலம், பி.டி.ஓ.,க்கள் தமிழ்செல்வி, அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பி.ஆர்.ஓ., சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

