sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கல் : குடிநீர் இன்றி தவிக்கும் பாரதி நகர் மக்கள்

/

பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கல் : குடிநீர் இன்றி தவிக்கும் பாரதி நகர் மக்கள்

பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கல் : குடிநீர் இன்றி தவிக்கும் பாரதி நகர் மக்கள்

பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கல் : குடிநீர் இன்றி தவிக்கும் பாரதி நகர் மக்கள்


ADDED : அக் 03, 2011 03:16 AM

Google News

ADDED : அக் 03, 2011 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு பாரதி நகரில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காமல், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிகின்றனர்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 5 00க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

இங்கு வசிப்பவர்களுக்கு சித்தோடு மெயின் ரோட்டில், 2 குழாய்களும், ஒரு இடத்தில் போர்வெல் அடிப்பைப்பும் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழாயிலும், இரண்டு பக்கமும் தண்ணீர் பிடிக்கும்படி அமைத்துள்ளனர்.

பாரதி நகர் பகுதியில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலானவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதால், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெறாமல், தெரு குழாய்களிலேயே தண்ணீர் பிடித்து வருகின்றனர். வீட்டு குடிநீர் இணைப்புகள் குறைவாக உள்ளதால், நகராட்சி நிர்வாகம் முன்பு 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வந்தது. தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வழங்குகிறது.

குடிநீர் வழங்கும் போதும், குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடுவதால், இரட்டை குழாயில், ஒரு குழாயில் மட்டுமே, அதிகப்படியான தண்ணீர் வருகிறது. மற்றொன்றில் சரியாக வருவதே இல்லை. மேலும், இரண்டு மணி நேரம் மட்டும் விடுவதால், தண்ணீர் பிடிக்க வரும் பெண்களுக்குள் வாக்குவாதங்களும், சண்டையும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதுபற்றி தங்கள் ஏரியா கவுன்சிலரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித பலனும் இல்லை. எங்கள் பகுதி குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்காவிட்டால், விரைவில் சித்தோடு மெயின் ரோட்டில் காலி குடத்துடன் அமர்ந்து மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us