/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைதியாக முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
/
அமைதியாக முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
அமைதியாக முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
அமைதியாக முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
ADDED : பிப் 09, 2025 07:07 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, எவ்வித சலசலப்பும் இல்லாமல், அமைதியாக நடந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. இதை-யொட்டி கல்லுாரி நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை, பட்டாலியன் போலீசார், ஆயு-தப்படை போலீஸ், உள்ளூர் போலீசார் என, 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.காலை 7:45 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் மற்றும் வேட்பாளர்கள் முன்னி-லையில், தபால் ஓட்டு இருப்பு அறை 'சீல்' அகற்றப்பட்டு, 8:00 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. காலை, 8:00 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருப்பறை 'சீல்' அகற்றப்பட்டு, 8:30 மணிக்கு, 14 டேபிள்களில் ஓட்டு எண்-ணிக்கை துவங்கியது. ஓட்டு எண்ணும் பணியில், ஒரு டேபி-ளுக்கு ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் என, 51 பேர் ஈடுபட்டனர்.ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன், தனக்கும், தனது முகவர்க-ளுக்கும் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், முன் வரிசையில் முக-வருக்கு இடம் ஒதுக்கவில்லை என நா.த.க., வேட்பாளர் சீதாலட்-சுமி குரல் எழுப்பினார். தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த தலையிட்டு, வேட்பாளர்கள், அவர்களது முதன்மை முகவர்களை முன் வரிசையில் அமர வைத்ததால் சலசலப்பு அடங்கியது. இதை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடந்தது. அதேசமயம் மிக மந்தமாக நடந்ததால், முதல் சுற்று ஓட்டு எண்-ணிக்கை விபரமே அதிகாரப்பூர்வமாக, 10:05 மணிக்கே அறிவித்தனர். அதன் பிறகு அடுத்தடுத்த சுற்றுகள் விபரம் அறிவிக்கப்பட்டது.முதல் சுற்று முதலே தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், முன்-னிலை பெற்றார். இரண்டாவது சுற்றிலேயே தி.மு.க., 13,621 ஓட்டு வித்தியாசத்தை தொட்டதால், கல்லுாரி முன் சேலம் - கோவை நான்கு வழிச்சாலை அருகில் தி.மு.க.,வினர் கொடிகளை அசைத்தும், இனிப்பு வழங்கியும், கூச்சலிட்டும் கொண்டாட்-டத்தை தொடங்கி விட்டனர்.அதேநேரம் ஓட்டு எண்ணும் மையத்தில் இருந்து சுயேட்சை வேட்பாளர்கள், அவர்களது முக-வர்கள் படிப்படியாக வெளியேறினர். மதியம், 1:30 மணிக்கு மேல் மிக குறைவாகவே முகவர், வேட்பாளர்கள் இருந்ததால், ஓட்டு எண்ணிக்கை சற்று வேகமாகி மாலை, 6:00 மணிக்கு நிறை-வடைந்தது. தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா, ஐ.ஜி., செந்தில்குமார், டி.ஐ.ஜி., சந்திரமோகன், எஸ்.பி., ஜவகர் போன்றோர், ஆய்வுடன் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

