/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு-ஜோக்பானி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்
/
ஈரோடு-ஜோக்பானி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்
ஈரோடு-ஜோக்பானி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்
ஈரோடு-ஜோக்பானி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்
ADDED : செப் 17, 2025 01:30 AM
ஈரோடு, ஈரோட்டில் இருந்து பீகார் மாநிலம் ஜோக்பானி வரையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த, 15ல் ஜோக்பானியில் துவங்கியது. வாரந்தோறும் வியாழக்
கிழமைகளில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தும், ஜோக்பானியில் ஞாயிற்றுகிழமை தோறும் இந்த ரயில் புறப்படும்.
வரும், 25ம் தேதி காலை, 8:10 இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.16601) ஈரோடு ஸ்டேஷனில் இருந்து புறப் படுகிறது. சனிக்கிழமை இரவு, 7:00 மணிக்கு ஜோக்பானி சென்றடைகிறது. 28ம் தேதி மதியம், 3:15 மணிக்கு (வண்டி எண்.16602) ஜோக்பானியில் புறப்படுகிறது. ஈரோட்டுக்கு அக்., ௧ம் தேதி காலை, 7:20 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரயிலில் முன் பதிவற்ற பொது பெட்டி 11, படுக்கை வசதியுள்ள முன் பதிவு பெட்டி 8, மாற்று திறனாளிகள், பார்சல்கள் செல்ல 2 பெட்டி, உணவு தயாரிப்பு மற்றும் வினியோக பணிக்கு ஒரு பெட்டி பொருத்தப்படும். ஈரோட்டில் இருந்து கிளம்பி சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், ஓங்கோல், விஜயவாடா, காம்மாம், வாராங்கல், சந்திராபூர், நாக்பூர், இட்டார்சி, ஜபல்பூர், கட்னி, மாய்ஹர், சட்னா, மானிக்பூர், ஜஸ்ரா, தீன் தயாள் உபாத்யாயா, பக்சர், ஆரா, தானாபூர், பாடலிபுத்ரா, சோன்பூர், ஹஜிபூர், பரொனி, மான்சி, கதிஹார், ஹராரியா கோர்ட், போர்பேஸ்ஜங் வழியே ஜோக்பானியை அடைகிறது.
ஜோக்பானியில் இருந்து ஞாயிறு கிழமை புறப்படும் ரயில், வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஜோலார்பேட்டைக்கு அதிகாலை, 3:25 மணிக்கு வந்து சேரும். 3:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சேலத்துக்கு, காலை 5:27 மணிக்கு வரும். அங்கிருந்து, 5:30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு ஸ்டேஷனுக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை, 8:00 மணிக்கு துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.