ADDED : மார் 15, 2024 04:07 AM
தே.பருப்பு விற்பனை
கோபி: கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. இதில் ஒரு கிலோ குறைந்தபட்சம், 86 ரூபாய், அதிகபட்சம், 88 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 147 மூட்டைகளும், 5.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
பூவன் தார் ரூ.400கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 14 ரூபாய், நேந்திரன், 23 ரூபாய்க்கும் விற்றது, பூவன் தார், 400, தேன்வாழை, 480, செவ்வாழை, 550, ரொபஸ்டா, 300, பச்சைநாடான், 340, மொந்தன், 240, ரஸ்த்தாளி, 510 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு வந்த, 6,580 வாழைத்தார்களும், 7.18 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
மல்லிகை கிலோ ரூ.740சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ, 740 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ-640, காக்கடா-400, செண்டு மல்லி-70, கோழிக்கொண்டை-80, ஜாதி முல்லை-500, கனகாம்பரம்-250, சம்பங்கி-100, அரளி-140, துளசி-40, செவ்வந்தி-200 ரூபாய்க்கும் விற்பனையானது.

