ADDED : ஜூலை 28, 2011 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: குண்டடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி வட்டார செயலாளர் கொலை வழக்கில் மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காங்கேயம் அருகே குண்டடம் பொன்னாழிபாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்
(51); உழவர் உழைப்பாளர் கட்சி வட்டார செயலாளர். இவருக்கும், அதே பகுதியை
சேர்ந்த கோவிந்தசாமிக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
24ம் தேதி ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்டார்.நேற்று முன்தினம்
காளிபாளையத்தில் நின்றிருந்த செல்வராஜ்(37), முருகேசன்(25), காளிமுத்து
(47) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் மூவரை தேடி
வந்தனர்.நேற்று சூரியநல்லூர் பிரிவு ரோட்டில் நின்றிருந்த ரவி (50),
கோவிந்தசாமி (60) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில்
தங்கராஜ் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.