/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாஜி அமைச்சர் மீது கதர் ஊழியர் புகார்
/
மாஜி அமைச்சர் மீது கதர் ஊழியர் புகார்
ADDED : ஜூலை 28, 2011 03:09 AM
கோபிசெட்டிபாளையம்: முன்னாள் கதர் கிராம தொழில் அமைச்சர் மீது நடவடிக்கை
எடுக்க கோரி ஈரோட்டை சேர்ந்தவர் தமிழக அரசுக்கு மனு அனுப்பி உள்ளார்.
ஈரோட்டை சேர்ந்தவர் முருகன். மொடக்குறிச்சி கதர்கிராம தொழில் வாரியத்தில்
சோப்பு வல்லுனாராக பணியாற்றினார். சென்ற தி.மு.க., ஆட்சியில் எவ்வித முன்
அறிவிப்பும் இல்லாமல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில்
பொய்யான குற்றச்சாட்டால் பணி நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. கதர்
வாரியம், இவருக்கு மீண்டும் வேலை வழங்காமல் நிரந்தரமாக வேலையை விட்டு
நிறுத்தியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக முதல்வருக்கு
முருகன் கோரிக்கை மனு அனுப்பினார். மனுவில் கூறியுள்ளதாவது:தகவல் அறியும்
உரிமை சட்டத்தில் பெறப்பட்ட ஆவணம் மூலம், என் மீதான குற்றச்சாட்டு பொய் என
தெரியவந்தது. என்னை பணி நீக்க, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்
ஒப்புதல் அளித்துள்ளார். உதவி இயக்குனர் மாரியப்பன் எவ்வித விசாரணையும்
மேற்கொள்ளவில்லை. பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து பணி நீக்கம் செய்த
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.